பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2019

அக்குரஸ்ஸவில் பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டை!- ஒருவர் சுட்டுக்கொலை

அக்ரெஸ்ஸ, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பொலிஸாருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில்
, ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே இவ்வாறு இன்று அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கடந்த மாதம் 22ஆம் திகதி அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேக நபரே இன்றைய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை இன்று அதிகாலை 2.50 மணியளவில் கைது செய்வதற்காக பொலிஸ் குழு ஒன்று சென்றுள்ளது.இதன்போது சந்தேக நபர் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சந்தேகநபர் 56 வயதானவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.