பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2019

திடீர் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து பேச்சு

தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை, நடத்துவது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

முன்கூட்டிய பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். எனினும், இதுதொடர்பான தனது முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கவில்லை. எனினும் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் முன்கூட்டியே தேர்தலை நடத்துவது தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளனர்.

முன்கூட்டியே தேர்தலை நடத்துவதெனில் நாடாளுமன்றத்தில் விசேட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதுவும் அனைத்து கட்சியும் ஒரே கருத்துடன் இருந்தால் அதனை நிறைவேற்றுவதற்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் ஐ.தே.க.வின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்கூட்டிய தேர்தலுக்கு உடன்படவில்லை எனவும் அந்தப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது