பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2019

சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது

சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் பல புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.