பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2019

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு போட்டியாளர் யார்?

வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விஷால் அணியினர் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படாததால் சங்க உறுப்பினர்கள் அவர்களது மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விஷால் அணிக்கு எதிராக போட்டியிட வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளார் ஐசரி கணேஷ் தான் சரியானவர்.

தன்னுடன் இன்னும் சில சங்க உறுப்பினர்கள் ஐசரி கணேஷ் அவர்களுக்கு ஆதரவளிக்கவிருக்கிறோம். கடந்த நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷிற்கு முக்கிய பங்கு உள்ளது. தற்போது அவரே விஷால் அணிக்கு எதிராக போட்டியிடுகிறார். ஐசரி கணேஷ் பதவிக்கு வந்தால் சங்கத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கும் சங்க உறுப்பினர்களின் நலனிற்கும் உழைப்பார் என நம்புகிறோம் என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்