பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2019

யாழ். நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் நின்ற நால்வர் கைது!

யாழ். நகரில் நள்ளிரவு வேளை சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் நின்ற நால்வரை, யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வீதி ரோந்து நடவடிக்கையில் நேற்று (04)நள்ளிரவு ஈடுபட்டிருந்த பொலிஸார்,இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.இவர்களிடம் விசாரணை நடத்தியபோது,உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால்,குறித்த நால்வரையும் கைதுசெய்ததாக,பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியைச் சேர்ந்த இருவரும், யாழ்.நாவாந்துறையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 27 வயது முதல் 30 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை முன்னெடுத்து வருவதோடு, விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.