பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2019

200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம்

தமிழகம் - மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்குமாறு கோரி நேற்று மாவட்ட ஆட்சியாளரிடம் மனுக்களை கையளித்தனர்.

இந்திய குடியுரிமை இல்லாததன் காரணமாக, பாதுகாப்பான தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியாத நிலைமையில் ஈழ ஏதிலிகள் இருக்கின்றனர். இந்தநிலையிலேயே அவர்கள் இந்திய குடியுரிமையை கோருகின்றனர்.

ஏற்கனவே அவர்கள் இதற்காக விண்ணப்பித்திருந்த போதும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இந்திய குடியுரிமையை கோரி விண்ணப்பிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று, சென்னை மேல்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.