பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2019

கூட்டமைப்பின் பிரேரணை- 2 நாட்கள் விவாதம்

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விவாதத்தைக் கோரியுள்ளது.