பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூலை, 2019

முதலில் மாகாணசபை தேர்தல்-வெளியாகும் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் இதற்கான அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் இதற்கான அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அதன்போதே மாகாணசபை தேர்தலை முதலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

மாகாணசபை தேர்தலை நடத்துவதெனில், அடுத்த ஒரு மாதத்திற்குள் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தியதற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏழு மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தும்படி பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையிலேயே, மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது