பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2019

முன்னணியுடன் இணைந்தார் அனந்தி ?

வடமாகாண முன்னாள் மகளீா் விவகாரங்களுக்கான அமைச்சா் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்த்தா்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்குவது தொடா்பாக பேசப்பட்ட நிலையில் அது சாத்தியமற்றதாகிவிட்டது.

இந்நிலையில் நேற்று மாலை அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தா்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அனந்தி சசிதரன் புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை நீக்கும் வகையில் விக்கினேஸ்வரன் அணி தரப்பின் சார்பில் முன்னணியைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகின்றது.

எனினும் என்ன விடையங்கள் குறித்துப் பேசப்பட்டன என்ற தகவலை வெளியிட இரு தரப்பும் மறுத்துவிட்டது.

இதேவேளை நேற்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அனந்தி விக்கியுடன் ஒரு தரப்பாக இருப்பதில் தமக்குப் பிரச்சனை இல்லை எனவும் ஆனால் அனந்தியுடன் தனிக் கூட்டு எதற்கும் வாய்ப்பே இல்லை என முன்னணி தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை அனந்தியின் திடீர் அழைப்பின் பேரில் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக அறியக்கிடைத்தது