பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2019

பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி மரணமான யாழ். இளைஞன்! - விபரங்கள் வெளியானது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்கா செல்லும் வழியில், பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன் நேற்று முன்தினம் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என்ற இந்த இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார். பயண முகவர் ஊடாக அமெரிக்கா செல்லும் போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பனாமா ஏரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, சேற்றுக்குள் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரினால் பனாமா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.