பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2019

இறுதிப் போரில் புலிகள் யாரும் சரணடையவில்லை! - இராணுவம்

இறுதிப்போரின் போது, விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தகவ​ல் உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதிலிலேயே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ். பீ அத்தபத்து என்பவரினால் கையொப்பமிடப்பட்டு அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்துக்கு அனுப்பட்டிருந்த விண்ணப்பத்துக்கு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் சிங்கள மொழியில் இந்தப் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை. அவர்கள் இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளனர். மேலும், சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரங்கொண்ட நிறுவனமான, புனர்வாழ்வு ஆணையாளர் காரியாலயத்திடம் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.