பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2019

அரசு கவிழுமா? - இன்று மாலை வாக்கெடுப்பு

அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மீதான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்றும் தொடரவுள்ள விவாதத்தை அடுத்து இன்று மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருக்கிறது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கவுள்ளனர்.