பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2019

வேலூர் தேர்தல்; இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்

வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும்.

வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.


இந்நிலையில், வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் என புகார் எழுந்தது. இந்த புகாரின்பேரில் அதிகாரிகள் சென்று மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.