பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2019

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை பாதிக்கும்-கனேடிய தூதரகம்

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைப் பாதிக்கும் என, கனடா தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா நியமனம் குறித்து இன்று கனேடிய தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

' இறுதிப்போரில் பல மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவரது நியமனம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் கனேடிய தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்கு சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.