பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2019

சிறுமி துஸ்பிரயோகம் - தாத்தா கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுக் காலை கிரான்குளம் கடற்கரைப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட வேளை, அப்பகுதியிலிருந்த சிலரால் குறித்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பேரப்பிள்ளை உறவு முறையான குறித்த சிறுமியையே சந்தேகநபர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சந்தேகநபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனரமை குறிப்பிடத்தக்கது