பக்கங்கள்

பக்கங்கள்

5 ஆக., 2019

யாருக்கு ஆதரவு?- அவசரப்பட வேண்டாம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். அதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெக்க முடியும்.

கடந்த அரசாங்கத்தின் போது பல்வேறு ஏற்பாடுகளை நாங்கள் செய்து வந்திருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, காணிப் பிரச்சினை மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கொண்டே செல்கின்றோம்.

மக்கள் எம்மைப்பற்றி குறைவாக எப்படிப் பேசினாலும் பரவாயில்லை. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.மக்களுக்கு சேவை வழங்கக் கூடியவர்கள். அதனால் எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் எப்போதும் நன்றிக்கடன் உள்ளவர்களாகவே இருப்போம்.

அத்துடன் கடந்த காலங்களில் எமக்கு நீங்கள் எவ்வாறு ஆதரித்தீர்களோ அதேபோன்று தொடர்ந்தும் எமக்கு ஆதரவு வழங்குவீர்கள் என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.துரைரட்ணசிங்கம், சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.