பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2019

ஓடிப்போன கோத்தா போட்டியிட முடியாது

நாட்டை விட்டு ஓடிப்போனவருக்கு நாட்டின் மீது பற்று இருக்கமுடியாது.வேறுநாடொன்றின் பிரஜையான ஒருவர் நாட்டில் நடைமுறை அரசியலமைப்புக்கிணங்க தேர்தலில் நிற்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
நாட்டை விட்டு ஓடிப்போனவருக்கு நாட்டின் மீது பற்று இருக்கமுடியாது.வேறுநாடொன்றின் பிரஜையான ஒருவர் நாட்டில் நடைமுறை அரசியலமைப்புக்கிணங்க தேர்தலில் நிற்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

'கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதற்கோ, ஆதரவளிக்காமல் இருப்பதற்கோ எம்மால் முடியாது. அதற்கு காரணம் அவர் இன்னும் தமது அமெரிக்க பிரஜாவுரிமையை விலக்கிக் கொள்ளவில்லை. இதற்கிணங்க தற்போது எமது நாட்டிலுள்ள சட்டத்திற்கிணங்க தேர்தலில் அவர் போட்டியிட முடியாது.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஜனாதிபதி வேட்பாளர் என்று அவரை காட்டியிருந்தாலும் அவருக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடையாது. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க பிரஜையொருவர் தேவையில்லை. நாட்டை கட்டியெழுப்ப தேவையானளவு அரசியல்வாதிகள் இங்குள்ளனர். நாட்டை விட்டு ஓடிப்போன ஒருவருக்கு நாடு தொடர்பான பற்று இருக்கப்போவதில்லை.

எனக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சமல் ராஜபக்ஷவுக்கும் தினேஸ் குணவர்தனவுக்கும் மற்றும் எம்போன்றவர்களுக்கும் எமது நாடு தொடர்பில் அக்கறையுள்ளது. நாட்டை விட்டுவிட்டு ஓடிப்போனவருக்கு நாட்டின் மீது எந்த நேசமும் கிடையாது. நாம் இந்த நாட்டு புத்திரர்கள். நாம் ஒருபோதும் இந்த நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் அவரோடு போயுள்ளனர். எனினும் அக்கட்சியின் பெரும்பாலானோர் எம்முடனேயே உள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு இன்னும் காலம் எடுக்கும்.

நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒருபோதும் விட்டு விலகவில்லை. அதேபோன்று ஒருபோதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு செல்லவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தபோது அதனை முதலில் எதிர்த்தவன் நான்தான்.

அவ்வாறான நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு போவேனா. அதேபோன்று என்​னைப் போல் எவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை. அதற்காக அவர் என்னை கட்சியிலிருந்து விலக்குவதென்றால் எத்தனையோ முறை விலக்கியிருக்க வேண்டும். எனினும் அவர் அவ்வாறு செய்யவில்லை.

சரத் பொன்சேகாவுக்கு 'ஜம்பர்' உடுத்தியது கோத்தாபய ராஜபக்ஷவும் அவர் உள்ளிட்ட அரசாங்கமும் தான். கோத்தாபயவை அதிகம் விமர்சித்ததும் சரத் பொன்சேகா தான். எனினும் அவர் இப்போது மாறிவிட்டாரோ என நினைக்கத் தோன்றுகின்றது. அவ்வாறு மாறினால் பரவாயில்லை. எவ்வாறெனினும் சரத் பொன்சேகாவுக்கு 'ஜம்பர் 'உடுத்தியது நாமல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.