பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2019

கோயில் கும்பிட யாழ்.வரும் கோத்தா?

பொதுஜன பெரமுனக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு ருவன்வெலி மஹா விகாரையில் இடம்பெறும் ஆசிர்வாத பூஜையில், கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


மேலும் நாளைய தினம் ஜய சிறீ மஹா விகாரையில் இடம்பெறும் மற்றுமொரு வழிபாட்டிலும் கோட்டா, மஹிந்த உள்ளிட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் கோத்த நல்லூர் கந்தசாமி கோவிலில் வழிப்பாட்டில் ஈடுபடவுள்ளதாக அவரது யாழ்.இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவரது யாழ்.விஜயம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டதாகவும் திகதி விரையில் அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.