பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2019

சவேந்திர சில்வாவின் நியமனம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை எனவும் அதேவேளை, அவரின் நியமனத்தினால் மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

இந்நிலையிலேயே சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தனிநபரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமையானது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பெரும் அவமரியாதையாகும். சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தினால் நாங்கள் மிகுந்த கலக்கமடைந்திருக்கிறோம் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.