பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2019

கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வலைவீச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கவுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு இடம்பெற்றுள்ளது