பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2019

கோட்டாபய இன்னும் அமெரிக்கப் பிரஜையா?வந்தது புது சர்ச்சை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் தனது அமெரிக்கக் குடியுரிமையை முற்றாக நீக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்கத் தூதரகத்தினால் அவருக்கு இறுதிக் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என்று தூதரக அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
.
அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருக்கின்ற போதிலும் அந்த விண்ணப்பம் பெற்றுக்கொண்டமைக்கான கடிதத்தையே கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு அமெரிக்கா வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இதனையே அண்மையில் கொழும்பில் நடந்த நிகழ்வொன்றின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.
.
எனினும் அமெரிக்கக் குடியுரிமை முற்றாக இரத்து செய்யப்பட்டதற்கான ஆவணம் இதுவரை கோட்டாபய ராஜபக்சவின் கைகளுக்குக் கிடைக்கவில்லை என்றும் அதனாலேயே அவர் பகிரங்கமாக ஆவணங்கள் எதனையும் காண்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
.
இந்த நிலையிலேயே கொழும்பில் நேற்று மாலை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம, கோட்டாபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்கப் பிரஜை என்பதை திட்டவட்டதாக தெரிவித்திருந்தா