பக்கங்கள்

பக்கங்கள்

8 ஆக., 2019

ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட்டால் அவருக்கு போட்டியாக ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக முன்னாள் பதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கான அறிவிப்புக்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை காரணமாகவே ஐ.தே.க. உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டபாய வேட்பாளராக களமிறங்கினால் யுத்த வெற்றியை கொண்டே பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதனால் யுத்தத்தை முடித்தவர் என்ற ரீதியில் சரத் பொன்சேகாவுக்கு அந்த உரிமை உள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாமல் வேறு ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் பிரதமரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.

இதனை விடுத்து வேறு ஒருவர் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்றும் அவர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.