பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2019

தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழோ அல்லது பழைய முறைமையின் கீழோ நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு, ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவின் கையொப்பத்துடன், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழோ அல்லது பழைய முறைமையின் கீழோ நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு, ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவின் கையொப்பத்துடன், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, உத்தியோகப்பூர்வ ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தும் செயற்பாடுகள், தொடர்ச்சியாக தாமதமடைந்து வருவதால், அரசமைப்புச் சட்டத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளது என்பதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில், ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“2017 ஒக்டோபர் மாதம், ஜனாதிபதியால், ஐவர் கொண்ட எல்லை நிர்ணயக் குழுவொன்று, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவால், மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதும், அதற்கான அங்கிகாரம் வழங்கப்படவில்லை.

“அதன் காரணணமாக, கடந்த வருடம் ஓகஸ்ட் 28ஆம் திகதி, பிரதமர் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அக்குழுவால், எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர், அந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

“மேற்குறிப்பிட்ட மீளாய்வுக் குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், ஜனாதிபதியால் அறிக்கையொன்றினூடாக, உடன் அமுலுக்கு வரும் வகையில், தேர்தல் பிரிவுகளின் புதிய இலக்கங்கள், எல்லை, மீளாய்வு குழு அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயர்களை பிரகடனப்படுத்தியதன் பின்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

“ஆனாலும் மீளாய்வுக் குழு, தனது கடமையை சரிவர ஆற்றாததன் காரணத்தால், மக்களுக்கு தேர்தல் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் அமுலிலிருக்கும் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவால், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஆலோசிப்பதற்கு, ஜனாதிபதி முடிவு செய்தார்.

“அதற்கமையவே, 29.08.2019 திகதியிடப்பட்ட, உயர்நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிக் குழாம், அவர்களது ஏகமனதான கருத்தாக, மீளாய்வுக் குழு அறிக்கையில்லாமல், திருத்தச்சட்டத்தின் சரத்துகளுக்கமைய, ஜனாதிபதியால் தேர்தலை நடத்துவதற்கான, எல்லை நிர்ணயக் குழுவால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் எல்லை நிர்ணயங்களை பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்றும் அதன் காரணத்தால், மாகாண சபை திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாதென்றும் அர்த்த விளக்க கட்டளைச் சட்டத்தின் சரத்துகளுக்கமைய குறித்த திருத்தச் சட்டத்திற்கு முன்னர் அமுலிலிருந்த சட்டத்தின் கீழும் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.