பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2019

திருடச் சென்றவர் கிணற்றில் விழுந்து மரணம்

யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில், திருடச் சென்றார் என சந்தேகிக்கப்படும் ஒருவர், கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டதையடுத்து, அங்கு சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறிதர் திரையரங்கிற்கு பின்புறமாக இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.