பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2019

பொய் சொல்கிறார் ஜனாதிபதி

சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் அல்லது சட்டமா அதிபர் ஆகியோருக்கே உயர் நீதிமன்ற நீதியரசரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல் அமைப்பினை தான் ஒரு போதும் மீறப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர், அவ்வாறு அரசியலமைப்பினை மீறியவர்கள் குறித்து உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.