பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2019

வடக்கு அதிபர்களுக்கு ஆளுநர் கடும் உத்தரவு!

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் அனுமதியின் போது, கல்வியமைச்சின் சுற்றறிக்கையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன், அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள்ளும் போது மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்