பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2019

பலாலி கட்டுப்பாட்டு கோபுரம் - அமைச்சரவை அனுமதி!

பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபா செலவில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபா செலவில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

அத்துடன், பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசுடன் உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த உடன்படிக்கையில் இலங்கை சார்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கையொப்பம் இடுவார் என்றும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஒப்புதல்களுக்குமான அமைச்சரவைப் பத்திரங்களை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்வைத்திருந்தார்.