பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2019

சுன்னாகத்தில் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம்- சுன்னாகம், அளவெட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள, வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரான யோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்துசம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட்டின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினரது வீட்டினை குறிவைத்து இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்