பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது


சிறீலங்கா அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவையை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், கருப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை நீக்கினாலும் கூட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பு குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படமாட்டாது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.