பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2019

ஒதுங்கினார் மைத்திரி - நடுநிலை வகிக்க முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக விலகியிருக்கவும், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்கவும், முடிவு செய்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ள நிலையில் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ நேற்றிரவு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அந்தப் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்ட சூடான வாத விவாதங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி இன்னும் விலகவில்லை என ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.