பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2019

புதிய கட்சியைத் தொடங்க சந்திரிகா யோசனை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க “ஸ்ரீலங்கா சுதந்திர பொது மக்கள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரித்தானியாவிலுள்ள சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இது தொடர்பில் இரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.எனினும் அமைச்சர் சஜித்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனால் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அது சுதந்திர கட்சியின் இறுதி என சந்திரிக்கா தரப்பு தெரிவித்துள்ளது.