பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2019

பலாலியிலிருந்து சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்

சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்?
கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கான விமானசேவையே கூடிய வருவமானத்தை அரசுக்கு தருவதாலேயே அதனை பலாலியிலிருந்து ஆரம்பிக்க பின்னடிப்பதாக சொல்லப்படுகின்றது.

குறித்த யாழ்ப்பாணம் விமான சேவையினை ஆரம்பிப்பதில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகளே தாமதம் ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது தற்போது வாரம் ஒன்றிற்கு கட்டுநாயக்காவில் இருந்து சென்னைக்கு 50 விமான சேவை இடம்மெறுவதன் மூலமே குறித்த விமான நிலையத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதனால் யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்தால் இச் சேவை குறைவடையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்