பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2019

அமெரிக்கா மீது பாயும் கோத்தா அணி!

இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தலைமை அதிகாரி ஆகியோர் இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்தமை குறித்து மகிந்த அணி கடும் சீற்றம் அடைந்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தலைமை அதிகாரி ஆகியோர் இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்தமை குறித்து மகிந்த அணி கடும் சீற்றம் அடைந்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க , ‘அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்துள்ளனர். ஏன் சந்திக்கின்றனர்? ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சந்திக்கின்றனர். இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.