பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2019

மோடியின் செய்தியுடன் வந்த ஜெய்சங்கர்- 19ஆம் திகதி டில்லி செல்கிறார் கோத்தா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை குறுகிய நேரப் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்துப் பேசினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை குறுகிய நேரப் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியைச் கூறிய அவர், சமாதானம், முன்னேற்றம், சுபீட்சம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில், ஜனாதிபதி கோத்தாபயவின் தலைமைத்துவத்தின் கீழ் உறுதியாக மேம்படுத்தப்படும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு மேலும் வலுவடையுமெனத் திடமான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.அவர் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.