பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2019

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

65 வயதுக்கும் மேற்பட்ட சிறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கொலை, கொள்ளை, பெண்கள் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 284 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்த கைதிகள் குறித்த விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைத்தவுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.