பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2019

சஜித் உட்பட எழுவர் இராஜினாமா

சஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது அணியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.

முன்னதாக சஜித் பிரேமதாச முடிவுகள் முழுமையாக வெளியாக முன்னர் தோல்வியை ஏற்று கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.



அவரை தொடர்ந்து, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பதவியை உடன் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதுடன், ஐக்கிய தேசிய கட்சியில் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

மேலும், அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்வதாக இன்று மாலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், மலிக் சமரவிக்ரம, ருவான் விஜேவர்த்தன மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக சற்றுமுன் அறிவத்துள்ளனர்.