பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2019

ரெலோ, புளொட் நாளை முடிவு அறிவிப்பு! - ரணிலுடன் பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.

ரெலோ, புளொட் தலைவர்கள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினர். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான கலந்துரையாடல்களே இதன்போது இடம்பெற்றன.

புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தன; மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழரசு கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் ஆதரவின் முக்கியத்துவம் குறித்து தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது பிரதமர் தெளிவுபடுத்தினார்.

தமது கட்சிகளின் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக தர்மலிங்கம் சித்தார்த்தன மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதன்போது தெரிவித்துள்ளனர்