பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2019

முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகும்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.