பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2019

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசிய முன்னணி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தேசியகட்சிகள் தமிழர்பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய முன்னணியும் தமது பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்,

அதாவது இலங்கை ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும்,போட்டியிடும் சிங்களத் தலைமைகளினால் தமிழர்களுக்கு எந்த நலனும் ஏற்படப்போவதில்லை என்று ஏற்கனவே தமது கொள்கை நிலைப்படை தெரிவித்திருந்த நிலையில்,

இன்று யாழ்நகரில் திருநெல்வேலி பகுதில் தமது சிறீலங்கா சனாதிபதி தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் ஈடுபட்டனர்,கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா தலைமையில் இந்த பிரச்சாரம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.