பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2019

ஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாளையதினம் (14.11.2019) விசேட சந்திப்பொன்றை தேர்தல் ஆணைக்குழு நடத்தவுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல், வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் முடிவுகளை வெளியிடுவது தொடர்பான விடயங்கள் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டால் ஒரு வேட்பாளர் இரண்டு பிரதிநிதிகளை அனுப்ப முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது