பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2019

ஜெனீவாவில் ரணிலுக்கு குப்பை கொட்டியோருக்கு ஆப்பு!

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சைச் சுத்தப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம் புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவர்கள் ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம். இவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு வேண்டிய பிரகாரமே செயற்பட்டனர். தாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக செயற்படும் போது, வெளிவிவகார அமைச்சிலுள்ள இந்த அதிகாரிகள், சகவாழ்வைச் சீரழிப்பதாக எம்மைக் காட்டிக் கொடுத்தனர்.
தாம் ஜெனீவா சென்று நாட்டுக்காக குரல் கொடுத்த போது எம்மைப் பற்றி வெளிவிவகார அமைச்சிலுள்ள சிலர் தகவல் திரட்டினர். மலைநாட்டு முன்னாள் அமைச்சரின் உறவினருடைய மகன் ஒருவர் ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றினார். அவர் எம்மைப் பற்றிய தகவல்களைத் திரட்டியதாகவும் ஜனெத் விமல மேலும் குறிப்பிட்டுள்ளார்.