பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2019

பிரித்தானியதொழிலாளர் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை மனித உரிமைகள் விவகாரம் -

இலங்கையில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா மற்றும் காமன்வெல்த் நாடுகள் மூலம் செயற்படுவோம் என்று பிரித்தானியாவின் முன்னணி கட்சியும் எதிர்க்கட்சியுமான தொழிலாளர் கட்சி தமது நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் “இது மாற்றத்துக்கான நேரம்” என்ற பெயரில் வெளியிட்ட விஞ்ஞாபனத்திலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும், இந்தியாவின் காஸ்மீர், சிரியா, ஏமன் என பல நாடுகளில் இடம்பெறும் ஜனநாயக விரோத செயல்கள் குறித்தும் நீதிக்கான தீர்மானங்களையும் முன்வைத்துள்ளனர்