பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2019

வெலிக்கடை சிறையில் சம்பிக்கவை சந்தித்த ரணில்,சஜித் ,மனோ !

கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக் ரணவக்கவை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பார்வையிட்டுள்ளார்.

இன்று மாலை 3.15 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க சம்பிக்க ரணவக்கவை பார்வையிட்டதுடன், சுமார் 30 நிமிட பேச்சியதாவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், ஆசு மாரசிங்க ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது