பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2020

விக்கியை விட்டு பிரிந்த ஐங்கரநேசன் சித்தார்த்தனிடம் ஸீட் கேடடார் கூட்ட்டமைப்பு இப்போதைய சூழ்நிலையில் சேர்க்க ஆதரவு கொடுக்கும் போல

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த அணியிலிருந்து விலகிய நிலையில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

தற்போது திடீர்த் திருப்பமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தனைத் தொடர்புகொண்ட தமிழ்த் தேசியப் பசுமை இயகத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் அந்தக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றைத் தனக்குத் தரும்படி கோரியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பேரதிர்ச்சி அடைந்துள்ளதுடன் எனது நம்பிக்கைக்கு உரிய முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை என தனது முக்கியஸ்தர்களிடம் குறிப்பிட்டுளார்.

ஆனால் அதற்கு உடனடியாக எந்தச் சாதகமான பதிலையும் வழங்காத சித்தார்த்தன் தான் கொழும்பில் இருப்பதால் யாழ்ப்பாணம் வரும்போது நேரில் சந்தித்துப் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

ஐங்கரநேசன் ஊழல்வாதி அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி வடமாகாண சபையில் அப்போதைய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அணியினர் அழுத்தம்கொடுத்து மாகாண சபையை இயங்கவிடாமல் முடக்கியிருந்தனர்.

இந்த நிலையில் சித்தார்த்தன், ஐங்கரநேசனுக்கு ஆசனம் ஒன்றை வழங்க சம்மதித்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் அவர் போட்டியிடுவதற்கு சுமந்திரனின் அனுமதி கிடைக்காவிட்டால் ஐங்கரநேசனின் எண்ணம் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என சுறப்படுகிறது.

பிரிந்து சென்றவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் கருதி இணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தமையும் குிறிப்பிடத் தக்கது.