பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2020

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் 7711 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, சீனாவை தவிர ஏனைய நாடுகளில் வைரஸ் பரவும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பரவும் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

2002 – 2003 ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பை விட கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.