பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2020

காணாமல் போனோர் விவகாரம் - ஜனாதிபதியுடன் ஐ.நா பிரதிநிதி பேச்சு


ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர் நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராட்டைத்
தெரிவித்துள்ளார்
இந்த சந்திப்பின்போது, வறுமை ஒழிப்பு, வானிலை மாற்றங்கள், அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான செயற்பாடுகளை கையாளும் விதம் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகள், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளுக்கு இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்க தயாரெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், அதனை அரசியல் நோக்கத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் புறக்கணிப்பதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.