பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2020

அமெரிக்கவின் தடையை எதிர்த்தார் கோத்தா!
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த தடைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதுடன் தகவல் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், அதன் முடிவை பரிசீலனை செய்யவும் அமெரிக்காவை நாம் கோருகிறோம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று (14) இரவு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க அரசு நேற்று (14) மாலை தடை விதித்து உத்தரவிட்டது.



2009ம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறலான சட்டவிரோதக் கொலைகளில், அவரது ஈடுபாடு தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது