பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2020

அமலநாதன் வேண்டாம் விமலநாதனே வேண்டும் : காய் நகர்த்திய சாள்ஸ் அம்மையாா்

முல்லைத்தீவு மாவட்ட செயலராக விமலநாதனை நியமனம் செய்யவேண்டும். என வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அம்மையாா் எடுத்த தீவிர முயற்சிக்கமைய விமலநாதனை மாவட்ட செயலராக நியமனம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டு நேற்று மாலை இடம் பெற்றிருந்தது. இதன்போது முன்னதாக பாிந்துரைக்கப்பட்ட அமலநாதனின் பெயா் நீக்கப்பட்டு விமல நாதனின் பெயா் பலந்துரைக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது அமலநாதன் வேண்டாம். விமலநாதன்தான் வேண்டும் என ஆளுநா் ஜனாதிபதிக்கு எழு திய கடிதம் பெரும் பங்காற்றியுள்ளது. இதனடிப்படையில் அடுத்துவரும் சில நாட்களில் முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபராக விமலநாதன் பதவியேற்கவுள்ளாா்