பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2020

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய ஜேர்மானியர் கவலைக்கிடம்: நெதர்லாந்துக்கும் கொரோனாவை பரப்பினாரா?


ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்களன்று நெதர்லாந்து எல்லைக்கருகிலுள்ள Erkelenz நகரில் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, தனது 40 வயதுகளிலிருக்கும் அவர் பின்னர் Duesseldorf பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது மனைவிக்கும் நோய் அறிகுறிகள் தெரியவரவே, அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


ஜேர்மனியின் வட Rhine-Westphalia மாகாண சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த ஜேர்மானியர் சென்ற வாரம் நெதர்லாந்தின் Limburg மாகாணத்திற்கு வந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, நெதர்லாந்து சுகாதார அலுவலர்கள் அவர் எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

நெதர்லாந்தில் இதுவரை யாரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.