பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2020

பகிடிவதை துன்புறுத்தல் புரிந்த மாணவனின் வீடு தாக்கப்பட்டுள்ளது.
பாலியல் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனொருவனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள் நுழையவும் கற்றல் செயற்பாடுகளிலும் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் வசிக்கும் மாணவனின் வீடே தாக்கப்பட்டுள்ளது.


மாணவது வீட்டுக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு சென்ற நபர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


வீட்டின் முன்னதாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதுடன் யன்னல்களையும் கும்பல் அடித்து சேதமாக்கியுள்ளது